
செய்வினை அல்லது மருந்து வைத்தல் என்றால் என் ன.... செய்வினை இடு மருந்து அல்லது மருந்து வைத்தல் என்பது உடலில் தங்கி இருக்கும் அடையாளம் காண முடியாத நச்சு தன்மையை குறிக்கும் சொல். இது இடு மருந்து.....கைவிஷம்.. கை மருந்து... என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் எதிரிகள் அல்லது விரோதிகளால் மிக சாதுர்யமாக கொடுக்கப்படுகிறது. இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருப்பதை போலவே நச்சு தன்மை வாய்ந்த விஷ தாவரங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய நச்சு தாவரங்களையும் தெரிந்தோ தெரியாமலோ உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளே இடுமருந்து..செய்வினை...மருந்து வைத்தல்...கைவிஷம் என்று சொல்லப்படும் பாதிப்புகள் அவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ உட்கொள்ளப்படும் நச்சு தாவரங்களின் விஷத்தன்மை ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து விஷத்தின் தன்மைக்கு தகுந்தவாறு உடல் உறுப்புக்களை பாதிக்கிறது. இதனால் ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகள் விஷதன்மை உடலில் இருந்து நீங்கும் வரை இருக்கும். மருத்துவத்திற்கு கட்டுப்படாத நீண்ட நாட்களாக தீர்க்கப்பாடாத உடல் பாதிப்புகளோ...மன பாதிப்புகளோ...